மகாமகமும் ... நம்ம மார்கெட்டிங்கும்

குடந்தை ரயில் நிலையத்தில் 
நமது BSNL டெலிகாம் சென்டருக்கு ... இடம் கிடையாது ...
அனுமதியில்லையென ரயில்வே நிர்வாகம் மறுப்பு ...
இது ... போதாது என ..?
BSNL  மொபைல் டவர் நிறுத்திடவும் ...
அனுமதி கிடையாதாம் !
ஆனால் ... ரயில் நிலையத்தில் 
தமிழக அரசின் சுற்றுலாதுறைக்கு 
இடம் ஒதுக்கபட்டு 13.2.2016 முதல் செயல்படுகிறது !

மகா மக குளத்தின் மிக அருகில் உள்ள ...BSNL   இடத்தில்
விளம்பர  அவலம் ... சொல்லாமலே  இருந்திருக்கலாம் 
என   நாம் எண்ணிடும் அளவிற்கு ...
யானைக்கு ... ஐந்து ரூபாய் பாப்கார்ன் பாக்கெட் 
வாங்கி தந்திருக்கும் ...குடந்தை மார்கெட்டிங் ...
மாநில சங்க கவனத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது ...
மாநில நிர்வாகத்தின்  மேல்மட்ட தலையீடு ...
ரயில்வே நிர்வாகத்தோடு தேவை என்பதை வலியுறுத்தி உள்ளோம் ...
குடந்தை மகா மக டெலிகாம் சென்டர் 
சிறப்பு பணியில் (SPECIAL DUTY -VOLUNTEER )
தோழர் ...தோழியர்கள் .. தவறாது பணியில் ஈடுபடுவோம் ...
சிரமங்கள்  பொறுத்து பணி சிறக்க செய்வோம் ...
மார்க்கெட்டிங் என்றால் என்ன ?
எனும் கேள்வி நம் மனதில் எழுந்தது ...
அர்பணிப்போடு ...ஆர்வத்தோடு ...
எதையாவது ... எப்படியாவது ... 
திறம்பட செய் ... என்பதே "மார்க்கெட்டிங் "
என பொருள்  உணரவைத்தார்  ...
வைதீஸ்வரன் கோயில் ...போன் மெக்கானிக் 
தோழர் .முத்துகுமாரசாமி 
12.2.2016  அன்று தன்  மகனின் திருமணத்தில் .... 
ஆம் ...
அவர் அளித்த ... தாம்பூல பையே  சாட்சி ....