பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்


First Published : 22 April 2015 04:20 AM IST
பி.எஸ்.என்.எஸ். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பிலான 2 நாள் வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.போராட்டத்தில் 140 பெண்கள் உள்பட 543 பேர் பங்கேற்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள 68 அலுவலகங்களும் பூட்டப்பட்டிருந்தன.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்தும், அதன் சேவையை மேம்படுத்திடவும், புதிய உபகரணங்கள் வாங்கவும், தனியார் நிறுவனங்கள்
கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுத்து நிறுத்தும் வகையில், பி.எஸ்.என்.எல். அரசுத் துறையாக நீடித்திட வலியுறுத்தியும், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்
சங்கங்களின் சார்பில் ஏப். 21, 22 ஆகிய 2 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 68 பிஎஸ்என்எல் அலுவலகங்களைச் சேர்ந்த 140 பெண்கள்
உள்பட 543 பேர் பங்கேற்றனர்.
இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. வேலைநிறுத்தப் போராட்டத்தால் தொலைத்தொடர்பில் பாதிப்பு
இல்லை என்றாலும், கட்டணம் செலுத்த வந்தவர்கள், கட்டணம் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
குடந்தையில் ஆர்ப்பாட்டம்... இதேபோல், கும்பகோணத்தில் வேலைநிறுத்த தர்னா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் குருசாமி, சுவாமிநாதன், கணேசன், மகேந்திரன், பட்டாபிராமன் உள்ளிட்ட பல ஊழியர்களும் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு
கோஷங்களை எழுப்பினர்