ரூ.10,000 கோடி முறைகேடு? பெட்ரோலிய ஆவணங்கள் திருட்டு வழக்கில் திருப்பம்


தேசப் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்கள் 
திருட்டு: இந்நிலையில், பெட்ரோலிய அமைச்சக 
ரகசிய ஆவணங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) 
நிறுவனத்தைச் சேர்ந்த சைலேஷ் சக்சேனா, 
எஸ்ஸார் நிறுவனத்தைச் சேர்ந்த வினய் 
குமார், கெய்ர்ன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 
கே.கே. நாயக், ஜுபிலண்ட் நிறுவனத்தைச் 
சேர்ந்த சுபாஷ் சந்திரா, ரிலையன்ஸ் அனில் 
திருபாய்  அம்பானி குழுமத்தைச் (ஏடிஏஜி) 
சேர்ந்த ரிஷி ஆனந்த் ஆகிய 5 பேரை தில்லி 
குற்றப்பிரிவு போலீஸார்வெள்ளிக்கிழமை 
கைது செய்தனர்.
ஐவரையும், தில்லி பெருநகர தலைமை 
நடுவர்மன்ற நீதிபதி சஞ்சய் கனக்வால் 
முன்னிலையில், தில்லி குற்றப்பிரிவு 
போலீஸார் சனிக்கிழமை ஆஜர்படுத்தினர். 
அப்போது போலீஸார் தெரிவித்ததாவது:
இந்த வழக்கில், தேசப் பாதுகாப்பும் 
சம்பந்தப்பட்டுள்ளது. போலீஸார் நடத்திய 
சோதனையின்போது, தேசப் பாதுகாப்பு 
தொடர்பான ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன. 
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த 
ஆவணங்களை, தங்களது மூத்த 
அதிகாரிகளுக்காக அவர்கள் 5 பேரும் 
வாங்கியுள்ளனர். 5 பேருக்கு எதிராகவும் 
அலுவலக ரகசியங்கள் சட்டத்தின் கீழ் 
குற்றம்சாட்ட முகாந்திரம் உள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் 
தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரகங்களுடன் 
ஆலோசனைநடத்தி வருகிறோம். அதேபோல், 
இந்த விவகாரம் தொடர்பாக 5 பேரையும் 
காவலில் எடுத்து விசாரிக்க விரும்புகிறோம் 
என்று போலீஸார் தெரிவித்தனர்