NFTE- BSNL., வேலூர் மாவட்டம். 

வைப்புநிதி பட்டுவாடா -ஊழியர்கள் 

கவனத்திற்கு...

குத்தகைதாரர்களின் கவனத்திற்கும் கூட  !

தோழர்களே !
கடந்த சில ஆண்டுகளாக வைப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு  வருகிறது. மாதம் இரண்டு மூன்று முறை பட்டுவாடா என்பது மாறி, மாதம் ஒரு முறை அதுவும் மூன்றாவது வாரத்தில் மட்டுமே என்பதே இன்றைய நிலை. விரும்பியோ விரும்பாமலோ பல ஊழியர்களுக்கு GPF தான் மாத சம்பளம் என்பதே நம் மாநிலத்தில் நிலை என்பதையும், அவர்களின் சிரமத்தையும்  மாநிலச்சங்கமும் பல மாவட்ட சங்கங்களும் உணர்ந்தே உள்ளன.  அதனாலேயே, ஒவ்வொரு மாதமும் நமது மாநிலச்சங்கம் GPF நிதி ஒதுக்கீட்டிற்காக  அனைத்திந்திய சங்கத்திடம் தவறாமல் பேசுகிறது.
அனைத்திந்திய சங்கமும் இதற்காக GM, ED (F), Director (F) என பலரிடம் பேசி பண ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்கிறது. BSNLEU சங்கமும் கார்பரேட் அலுவலகத்தில் பலமுறை இப்பிரச்சினையை எழுப்பி வந்துள்ளது. செப்டம்பர் 2014-இல் நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்திலும் இப்பிரச்சினை எழுப்பப்பட்டது. கடுமையான நிதி நெருக்கடியால் கால தாமதம் ஏற்படுவதாகவும் இதனை உடனடியாக சரி செய்ய இயலாது எனவும் கூறி, DOT (CCA)-விலிருந்து BSNL ஊழியர்கள் GPF-ஐ நேரடியாக பெற்றுக்கொள்ளலாமே என DOT யின் Member (Finance) கூறியதாகவும் கூறப்பட்டது. இதனை ஊழியர் தரப்பு ஏற்கவில்லை.
பொங்கலை முன்னிட்டு நமது மாநிலத்திற்கு முன்னதாகவே நிதி ஒதுக்க வேண்டி அனைத்திந்திய சங்கத்தை மாநிலச்சங்கம் 8-ம் தேதியே அணுகியது. அன்றே நமது அனைத்திந்திய தலைவர் தோழர் இஸ்லாம் ED (F) உடன் பேசினார். மீண்டும் 13.01.2015 அன்றும் பேசினார். அன்றே, 20 கோடி ஒதுக்கீட்டுக்கான கடிதம் - 15-ம் தேதிக்குப்பிறகு பட்டுவாடா செய்ய வேண்டும்  என்ற நிபந்தனையுடன் - அனுப்பப்பட்டது. 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் மாநிலச்சங்கம் மீண்டும் 14.01.2015 அன்று நமது பொதுச்செயலரிடம் இப்பிரச்சினையை கொண்டு சென்றது. அவரும்  ED (F) அவர்களிடம் பேசினார். நிதியில்லை என்ற காரணத்தால் அது இயலவில்லை.    
      
19.01.2015 அன்று, 16 கோடி ரூபாய் மட்டும் கார்பரேட் அலுவலகத்தால் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகை, தேவையை விட சுமார் 3.75 கோடி ரூபாய் குறைவானது. மாநிலச்செயலர் Pr.GM (F) இடம் பேச, 21.01.2015 அன்று தான் முழு நிதியும் கிடைத்தது. 22.01.2015 அன்று GPF-ம் 23.01.2015 அன்று Festival-ம் அனுப்பப்பட்டு விடும் என்று உறுதி கூறப்பட்டது. ஆனால், 22.01.2015 அன்று கூட வங்கிக்கு GPF லிஸ்ட் தரப்படவில்லை இந்த கால தாமதத்தை, அன்றிரவு தலைமைப் பொதுமேலாளரின் கவனத்திற்கு நமது மாநிலச்செயலர் கொண்டு சென்றார்.  CGM தலையிட்ட பின், 23.01.2015 அன்றுதான் வங்கிக்கு லிஸ்ட் தரப்பட்டது.  ERP-யில் எழுந்த சில பிரச்சினைகள் காரணமாக கால தாமதமாகிவிட்டதாக கூறப்பட்டது. மும்பையில் உள்ள வங்கியின் உயரதிகாரிகளிடம்  நமது மாநில  நிர்வாகம் சார்பாக பேசி, பட்டுவாடா காலதாமதம் ஆகாமல் பார்த்துக்கொள்ளும்படி வேண்டுகோள் விடப்பட்டது. 24.01.2015 அன்று அதிகாலை முதல் ஊழியர்களின் வங்கிக்கணக்குகளில் GPF வரவு வைத்தல் துவங்கியது.  
8-ம் தேதி துவங்கி 24-ம் தேதி வரை, அனைத்திந்திய சங்கம், தலைமை பொது மேலாளர், முதன்மை பொது மேலாளர் (நிதி) என்று நமது மாநிலச்செயலரும், மாநில துணைச்செயலர் தோழர் முரளியும் பேசியது பலரிடம், பல முறை. மாநிலச்செயலர் கடுமையாக கடிந்து கொண்டது சில அதிகாரிகளை. 
எது எப்படி இருப்பினும், கடுமையான  நிதி பற்றாக்குறை காரணமாகவும், நிதியாண்டின் இறுதியில் வங்கிகளில் இருந்து வாங்கும் கடனை கூடுமான வரை குறைக்க BSNL முயல்வதாலும் அநேகமாக இந்நிலை இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் போலவே தோன்றுகிறது.. 
கு.அல்லிராஜா,  மாவட்டச்செயலர்

25.01.2015.