airtel ன் ... சதுரங்க வேட்டை



ஏர்டெல் என்றாலே அதற்கு மறுபெயர் ஏமாற்றுத்தனம் என்று ஆகி விடும் போல. பேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு தான் வாட்ஸ் ஆப்பை வாங்கியது. வாட்ஸ் அப்புக்கு 500 மில்லியன் யூசர்கள் உள்ளார்கள். அதில் 50 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ளார்கள். எனவே அவர்கள் மூலம் ஏர்டெல் நிறுவனம் பணம் சம்பாதிக்க முடிவு செய்தது. 

ஏர்டெல்லும் வாட்ஸ் ஆப்பும் கூட்டு சேர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் பேக் என்னும் புதிய திட்டத்தை  கடந்த மே மாதம் கொண்டு வந்தார்கள். இதன் விலை 36 ரூபாயில் இருந்து 49 வரை உள்ளது. இது நாம் எந்த மாநிலத்தில் இருக்கிறோம் என்பதை பொருத்து மாறும். இவர்கள் கூறியது என்னவென்றால் வாட்ஸ் ஆப் மட்டும் பயன்படுத்தி கொள்ள மாதம் 200 எம்.பி. இலவசமாக வழங்கப்படும் என்று . ஆனால் அந்த பேக்கை பயன்படுத்திய பலர் கூறும் புகார் என்னவென்றால் அந்த 200 எம்.பி.யில் இருந்து டேட்டா குறைவது இல்லை. நமது மெயின் பேலன்சில் இருந்து தான் பணம் குறைகிறது.

இது குறித்து ஏர்டெல் கஸ்டமர் கேரிடம் கேட்டால், அது சாட்டிங்குக்கு மட்டும் தான் போட்டோ , வீடியோ டவுன்லோட் செய்தால் தனியாக பணம் வசூலிக்கப்படும் என்றும் .வாட்ஸ் ஆப்பை அப்ளிகேஷனில் பயன்படுத்தாமல் வேறு முறையில் பயன்படுத்த வேண்டும் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை கூறுகிறார்கள். 

மொத்தத்தில் இது ஒரு ஏமாற்றுதனம் என்று தெளிவாக தெரிகிறது. எனவே இந்த பேக்கை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இந்த பதிவை முடிந்த அளவு ஷேர் செய்து உங்களது நண்பர்களுக்கு உதவுங்கள். - See more at: http://www.satrumun.net/2014/08/4_20.html#sthash.sBvX6UJu.dpuf