தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்கு ரூ. 69,500 கோடி


டிஜிட்டல் இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 69,500 கோடியை மத்திய அரசு முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது.
நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளையும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையில் இணைக்க பிராட்பேண்ட், மொபைல்போன் வசதி நெட்வர்க் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 32,000 கோடி ஒதுக்கியுள்ளது.
இதுவரை மொபைல் போன் தொடர்பு வசதி இல்லாத 42,300 கிராமங்களுக்கு மொபைல்போன் கட்டமைப்பு வசதியை அளிக்க ரூ. 16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் இண்டர்நெட் வசதி அமைக்க ரூ. 4,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், தேசிய தகவல் கட்டமைப்பை உருவாக்கவும் ரூ. 15,686 கோடி ஒதுக்கப்பட உள்ளது.