போனஸ் ... அளந்து  தந்திட ..
அளவுகோல் ...கண்டுபிடிக்கபட்டுள்ளது ...!

லாபத்துடன் இணைந்த போனஸ் முறை 
தவிர்த்து 
உற்பத்தியுடன் இணைந்த போனஸ் முறை 
ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது .

உற்பத்தியுடன் இணைந்த போனஸ் என்றால் என்ன ?
நிறைய ...புதிய ...LANDLINE ,BROAD BAND 
இணைப்புகள்  வழங்க வேண்டும் !
அதே போல் ...CLOSURE ஆகாமல் ...
இவைகளை தொடர்ந்து தக்கவைத்து கொள்வது !
WIMAX ,CDMA புதிய இணைப்பிலும் 
முன்னேற வேண்டும் !
இந்த வேலையை ஒழுங்காக செய்தால் ...
55 மதிப்பெண் பெற்றால் ...போனஸ் தகுதி !

அதே போல் ..
காலத்தே இணைப்பு கொடுப்பதும் ..
நேரத்தே பழுது பார்ப்பதும் ....தொடரவேண்டும் ...
இதற்க்கு 35 மதிப்பெண் ...
35 பெற்றால்  போனஸ் க்கு  தகுதி !

CONSUMER MOBILITY பிரிவிற்கு 
10 மதிப்பெண் ... நிர்ணயம் ...!
ஆக மொத்தத்தில் 

16 பெற்றால் பெருவாழ்வு எனபது ...
55 + 35 + 15  பெற்றால் தான் 
பெருவாழ்வு ...என அட்சதை தூவப்பட்டுள்ளது !
வாழ்ந்து காட்டுவோம் !