Friday, February 27, 2015

மார்ச் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு :


மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் நடைபெறவிருந்த 

காலவரையற்றவேலைநிறுத்தம் 

ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இரண்டு நாள் 

வேலை நிறுத்தமாக 

மாற்றப்பட்டு 

ஏப்ரல் 21, 22 தேதிகளில் 

நடைபெறும் என FORUM அறிவித்துள்ளது.

வேலை நிறுத்த நோட்டிஸ் மார்ச் 12-ம் தேதி தரப்பட்டும். 

அன்று நாடு முழுதும் கோரிக்கைகளை தீர்க்க 

வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஏற்றிட்ட பொறுப்பிற்கு ஏற்றப்படி  உழைத்தவரா ? ... YES !
இயக்கம் உயர்ந்திட உழைத்தவரா ?... YES !
அதுவே ... தோழன்...
S .S .கோபாலகிருஷ்ணன் 
உங்கள் உறுதி ...
உங்கள் உழைப்பு ...
நெஞ்சில் நிறுத்தி .பணி ஓய்வில்
வாழ்த்துகிறோம் !வாழ்த்துக்கள் !

Add caption

Thursday, February 26, 2015

Wednesday, February 25, 2015


BSNL invests Rs 11,000 crore to improve services: Ravi Shankar Prasad 


State-tun telecom companyBSNL is investing an over Rs 11,000 crore to improve its all-round services including strengthening network, modernising telephone exchanges and installing mobile towers in the naxal-dominated areas, Parliament was informed today. 


"BSNL and MTNL are taking several steps to enhance revenues through INVESTMENTS to strengthen its network and focus on consumer care and service delivery to improve quality of service," Telecom Minister Ravi Shankar Prasad informed the Lok Sabha in a written reply. 

Both companies have drastically lost their subscriber base mainly due to inadequate INVESTMENT that led to network coverage issues, inability to compete with private sector telecom firms with regard to marketing and customer satisfaction, he said. 

As per details shared by the minister, BSNL is augmenting its mobile network by installing additional 14,421 2G mobile sites and 10,605 3G sites with an estimated INVESTMENTof Rs 4,804 crore. 

Tuesday, February 24, 2015

வீர வணக்கம்

மறைந்தார் தியாகி ஐ. மாயாண்டி பாரதி!


தமிழகத்தின் மூத்த தியாகி ஐ.மாயாண்டி பாரதி இன்று(24.2.2015) மறைந்தார். 

ஐ. மாயாண்டி பாரதி - இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், நகைச்சுவைப் பேச்சாளர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவர் என்று பண்முகம் கொண்டவர்.

 இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த இவர் , தனது 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களின் வழியாகப் பொதுவுடமைக் கருத்துகளைப் பரப்பினார்.

 மதுரை நகரின் மேலமாசி வீதியில் 70-ம் எண் வீட்டில் வாழ்ந்த இருளப்பன் – தில்லையம்மாளுக்கு 11-வது குழந்தையாக 1917 ஆம் ஆண்டில் பிறந்தார் ஐ.மாயாண்டிபாரதி. பத்தாம் வகுப்பு வரை படித்தார்.

1935 ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் பொழுதும் அதே காலகட்டத்தில் ஹாசிமூசா துணிக்கடையின் முன்னர் நடந்த அந்நியத்துணி விலக்குப் போராட்டம் நடந்தபொழுதும் பள்ளி மாணவரான மாயாண்டி பாரதி தன் லஜபதிராய் வாலிபர் சங்க நண்பர்களுடன் சென்று வேடிக்கை பார்த்தார். அந்நியத்துணி விலக்குப் போராட்டத்தில் அடிபட்டவர்களை மருத்துவம் நடைபெறும் இடத்திற்குக் கயிற்றுக்கட்டிலில் தூக்கிக்கொண்டு செல்வது இவர்களது பணி.

1938 ஆம் ஆண்டு முதல் மாயாண்டி பாரதி நேரடி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினார். அவ்வாண்டு இராசபாளையத்தில் தமிழ் மாகாண காங்கிரசு மாநாடு நடபெற்றது. அம்மாநாட்டிற்கு ‘ திருப்பூர் குமரனுக்கு நினைவுச் சின்னம் எழுப்புக’ என்னும் கோரிக்கையைத் தன் நண்பர்களோடு இணைந்து பிரச்சாரம் செய்தவாரே சென்றார். அங்கே ம. கி. திருவேங்கடம், கே. இராமநாதன், சக்திதாசன் சுப்பிரமணியன் ஆகியோரின் நட்புக் கிடைத்தது. அவர்களின் அழைப்பின்பேரில் இதழியப் பணியாற்ற 1939 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாயாண்டி பாரதி சென்னைக்குச் சென்றார். காங்கிரசு இயக்கத்தில் இணைந்தார்.

பின்னர் 1940 ஆம் ஆண்டில் மதுரைக்குத் திரும்பினார். 1939 ஆம் ஆண்டில் இந்திய முசுலீம்கள் பாகிஸ்தான் கோரினர். இதனால் இந்திய தேசிய காங்கிரசில் இருந்த முசுலீம்கள் முக்கியத்துவம் இழந்தனர். பாகிஸ்தான் கோரிக்கை எதிர்த்து இந்து மகா சபை உருவாக்கப்பட்டது.  1940 ஆம் ஆண்டில் மாயாண்டி பாரதி மதுரை இராமநாதபுரம் மாவட்ட இந்துமகாசபை அமைப்புச் செயலாளராக இருந்தார். அப்பொழுது சாவர்க்கரை மதுரைக்கு அழைத்து வந்தார். அப்பொழுது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்தது. இளைஞர்கள் படையில் சேர்க்கப்பட்டார்கள். அதனை எதிர்த்துச் சாத்தூர் பகுதியில் போர் எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தினார். 

இதனால் 1940ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு திருவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதச் சிறையும் 50 ரூபாய் தண்டமும் சிவகாசி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை, திருச்சி, வேலூர், கோயமுத்தூர் சிறைகளுக்கு மாற்றப்பட்டு 1941 மார்ச் 21 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் சிறைவாசலில் கைதுசெய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் பாதுகாப்புக் கைதியாகச் சிறையில் இருந்தார்.

 1942ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற அவர், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்பொழுது பாதுகாப்புக் கைதியாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1943ஆம் ஆண்டில் வெளியே வந்த அவர் மீண்டும் கைது செய்யப்பட்டபொழுது, அவ்வண்டிக்கு பின்னால் ஓடிவந்த அவர் தாயார் மரணமடைந்தார். சிறையில் இருந்த மாயாண்டி பாரதியால் தன் தாயின் இறுதிச்சடங்கில் கூடக் கலந்துகொள்ள முடியவில்லை.

மாயாண்டி பாரதி சிறையில் இருந்தபொழுது, இந்து மகாசபையினர் அவரிடம் இரண்டாம் உலகப் போர் எதிர்ப்பு நடவடிக்கையில் இனி ஈடுபடுவது இல்லையென மன்னிப்பு கடிதம் எழுதி அரசுக்குக் கொடுத்துவிட்டு விடுதலை ஆகும்படி கூறினர். மாயாண்டி பாரதி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இந்து மகா சபையிலிருந்து விலகினார்.

போர் எதிர்ப்புக் கைதியாக 1941 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் சிறையில் இருந்தபொழுது பொதுவுடைமைத் தலைவர்களான ஜமத்கனி, வி. பி. சிந்தன், கே. ஏ. தாமோதரன் ஆகியோரை மாயாண்டி பாரதி சந்தித்தார். அவர்கள் நடத்திய மார்க்சிய வகுப்பால் ஈர்க்கப்பட்டு, பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.

1941ஆம் ஆண்டில் மதுரை ஹார்விமில் தொழிலாளர் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அதனால் மீண்டும் கைது செய்யப்பட்டு மதுரை, திருச்சி, வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். அங்கே கே. பி. கிருஷ்ணா என்பவரிடம் மார்க்சியம் பயின்றார். தண்டனைக் காலம் முடிந்து 1942 ஜூலையில் விடுதலை ஆனார். மதுரையில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் ஆனார்.

1942 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆகத்து புரட்சியில் கலந்துகொண்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அப்பொழுது அவர்தம் அம்மா காலமானார். அந்தச் சாவிற்கு மாயாண்டி பாரதியை அனுப்ப அன்றைய பிரிட்டிசு அரசு மறுத்துவிட்டது. பின்னர் தண்டனை முடிந்து 1944 ஆம் ஆண்டில் விடுதலையானார்.

திரு.வி. க. ஆசிரியராக இருந்த நவசக்தி இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 

1944ஆம் ஆண்டு பி. இராம்மூர்த்தியின் அழைப்பின்பேரில் சென்னைக்குச் சென்று 1964 ஆகஸ்ட் 15 ஆம் நாள் வரை ஜனசக்தியில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.  பின்னர் 1966 ஆம் ஆண்டு முதல் தீக்கதிர் இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டில் அவ்விதழிலிருந்து ஓய்வு பெற்றார்.

1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மாயாண்டி பாரதி தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு சமூகப் பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை நடத்திய மாயாண்டி பாரதி, தள்ளாத வயதிலும் முதுமையைப் பொருட்படுத்தாமல், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வருவதற்காகப் போராடினார்.

Monday, February 23, 2015


உலகமயம் 
பெற்றெடுத்த  பிசாசு

மீத்தேன்  திட்டம் 
உழவு  நடக்கும் நிலங்களில் 
எளவு நடக்க இயற்றிய திட்டம் 

அளவு கடந்த ஆசையால் வான்மூலம் 
உளவு பார்த்த செல்வத்தை  அந்நியர் 
களவு கொள்ளை கைகாட்டும் திட்டம் 

களையெடுக்கும் உழவர்கள் 
தலையெடுக்க விடாத திட்டம் 

இயற்கை தாயின் இதயம் கிழித்து 
மண் மாதாவின் மார்பகம் அறுத்து 
திருமகளான நிலமகள் மேலே 
திராவகம் வீசும் திட்டம் 

நஞ்சை புஞ்சை விளையும் மண்ணில் 
நஞ்சை புகுத்தும்  வஞ்சக திட்டம் 

நிலத்திலிருந்து  வெளியேற்ற போவது 
மீத்தேன்  வாயுவை மட்டுமா ?
விவசாயிகள் வாழ்வையும்தான் !

உலகமயம் தாராளமயம் பெற்றெடுத்த
இன்னொரு பிசாசு - இந்த 
அழிவு திட்டம் அமுலுக்கு வந்தால் 
கழிவு நீர் தேக்கமாய் கடைமடை மாறும் 

காவிரி நீர் ஆகியது கானல்நீர் - இனி 
நிலத்தடி நீருக்கும் நேர்ந்திடும் ஆபத்து !
குடி நீரும் இனி குதிரை கொம்புதான் !

உற்று பாருங்கள் 
காவிரி படுகையை - அதன் 
நெற்றியில் காணலாம் 
ஒற்றை நாணயம் 

புரிந்துணர்வு ஒப்பந்தம் அல்ல 
கொள்ளை லாப அரிப்புக்கு - இது 
சொரிந்துணர்வு ஒப்பந்தம் 

காவிரி படுகை 
ஆயிரங்கால பயிர்களின் அடையாளம் 
அன்னையை நேசிக்கும் அபிமானம்  இது 
அடகு போவது அவமானம் 

பன்னூறு ஆண்டுகளாய் 
பாசனம் செய்ததை 
பன்னாட்டு முதலைக்கு 
சாசனம் செய்வதோ ?

பூத்தேன் பொங்கும் 
பொன்னி நதிப் படுகையை 
காத்தேன் என்று களம் காணவிட்டால் 
மீத்தேன் திட்டம் நம்மை 
மாய்த்தேன்  என மார்தட்டும் 
தீர்த்தேன் எனத் தோள்தட்டும் 
எடுத்தேன் கவிழ்த்தேன் என்பவரை 
தடுத்தேன் தகர்த்தேன் 
என்றால்தான் கொம்புத்தேன் போலத் 
தழைத்தேன்  நிலைதேன் 
என வாழ்த்தும் 

விஷம் பாய்ச்ச வருகிறது 
பேரழிவு மீதேன் திட்டம் 
விசுவரூபம் எடுக்கட்டும் 
இனி நமது போராட்டம் !

வல்லம் தாஜ்பால் -  தஞ்சை 
(தொடர்புக்கு : 9443508846 )
( 17.2.2015 அன்று குடந்தையில் NFTE தமிழ் மாநில சங்கம் நடத்திய மீத்தேன்  திட்ட எதிர்ப்பு தொடர் முழக்க போராட்டத்தில் வாசித்தது - ஜனசக்தி யில் 22.2.2015 பிரசுரிக்கப்பட்டுள்ளது   )
Sunday, February 22, 2015


வங்கி ஊழியர்களின் ஊதிய விவகாரம்: மும்பையில் இன்று பேச்சு

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு விகிதத்தை 11 சதவீதத்திலிருந்து அதிகரிப்பது தொடர்பாக ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் இந்திய வங்கிகள் உயர் அதிகாரிகளுக்கும் (ஐபிஏ அமைப்பு) இடையே மும்பையில் திங்கள்கிழமை (பிப்.23) பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
வரும் 25-ஆம் தேதி முதல் நான்கு நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்டவை அறிவித்துள்ள நிலையில், இந்த இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஊதிய விகிதத்தை குறைத்துக் கொள்ளத் தயார்: நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டிய நிலையில் இந்திய வங்கிகளின் உயர் அதிகாரிகள் அமைப்பு (ஐபிஏ) உள்ளது. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினாலும், பிரதான ஊதிய உயர்வு கோரிக்கை காரணமாகவே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
மும்பையில் இன்று பேச்சு: இதுவரை நடைபெற்ற 16 கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஊதிய உயர்வை வலியுறுத்தி புதன்கிழமை (பிப்ரவரி 25) முதல் நான்கு நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறுதியாக மும்பையில் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கும் இந்திய வங்கிகள் உயர் அதிகாரிகளுக்கும் (ஐபிஏ) இடையே திங்கள்கிழமை (பிப்ரவரி 23) பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Saturday, February 21, 2015

ரூ.10,000 கோடி முறைகேடு? பெட்ரோலிய ஆவணங்கள் திருட்டு வழக்கில் திருப்பம்


தேசப் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்கள் 
திருட்டு: இந்நிலையில், பெட்ரோலிய அமைச்சக 
ரகசிய ஆவணங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) 
நிறுவனத்தைச் சேர்ந்த சைலேஷ் சக்சேனா, 
எஸ்ஸார் நிறுவனத்தைச் சேர்ந்த வினய் 
குமார், கெய்ர்ன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 
கே.கே. நாயக், ஜுபிலண்ட் நிறுவனத்தைச் 
சேர்ந்த சுபாஷ் சந்திரா, ரிலையன்ஸ் அனில் 
திருபாய்  அம்பானி குழுமத்தைச் (ஏடிஏஜி) 
சேர்ந்த ரிஷி ஆனந்த் ஆகிய 5 பேரை தில்லி 
குற்றப்பிரிவு போலீஸார்வெள்ளிக்கிழமை 
கைது செய்தனர்.
ஐவரையும், தில்லி பெருநகர தலைமை 
நடுவர்மன்ற நீதிபதி சஞ்சய் கனக்வால் 
முன்னிலையில், தில்லி குற்றப்பிரிவு 
போலீஸார் சனிக்கிழமை ஆஜர்படுத்தினர். 
அப்போது போலீஸார் தெரிவித்ததாவது:
இந்த வழக்கில், தேசப் பாதுகாப்பும் 
சம்பந்தப்பட்டுள்ளது. போலீஸார் நடத்திய 
சோதனையின்போது, தேசப் பாதுகாப்பு 
தொடர்பான ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன. 
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த 
ஆவணங்களை, தங்களது மூத்த 
அதிகாரிகளுக்காக அவர்கள் 5 பேரும் 
வாங்கியுள்ளனர். 5 பேருக்கு எதிராகவும் 
அலுவலக ரகசியங்கள் சட்டத்தின் கீழ் 
குற்றம்சாட்ட முகாந்திரம் உள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் 
தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரகங்களுடன் 
ஆலோசனைநடத்தி வருகிறோம். அதேபோல், 
இந்த விவகாரம் தொடர்பாக 5 பேரையும் 
காவலில் எடுத்து விசாரிக்க விரும்புகிறோம் 
என்று போலீஸார் தெரிவித்தனர்

Wednesday, February 18, 2015

தமிழ் தாத்தா உ வே சா பிறந்தநாள் 19.2.2015

கட்டாயம் ... மிக கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது !

Tuesday, February 17, 2015

தன்னெழுச்சியாய்...எழுந்திட்ட ...
தமிழ் மாநில மரபு தொடர்ச்சியென...
எட்டுத்திக்கிலுமிருந்து...
சமூக சிந்தனை நெஞ்சம் நிறுத்தி ...
திரண்டிட்ட ... தோழர் தோழியர் திருக்கூட்டம் !
  

குடந்தையில் குவிந்திட்ட ...
சரம் சரமாய் ... சங்கமித்த ...
மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் ... இது 
என குவிந்திட்ட ... தோழர் ... தோழியர்க்கு
குவிந்த கரத்தோடு 
நன்றி ... நன்றி !